நண்பன் - திரைவிமர்சனம்
- Details
- Published on Thursday, 12 January 2012 15:21
- Hits: 4745
நண்பன் விமர்சனம் - நண்பன் திரைப்பட விமர்சனம், நண்பன் தமிழ் திரைப்பட கதை, நண்பன் திரைப்பட மதிப்பீடு
நடிகர்கள் : விஜய், இலியானா, ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, அனுயா மற்றும் பலர்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர் : ஷங்கர்
தயாரிப்பாளர் : ஜெமினி பிலிம்ஸ்
பாடல் : நா.முத்துகுமார், மதன் கார்கி, விவேகா
தமிழ் சினிமாவின் மாஸ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்க வெளிவந்திருக்கும் படம் தான் "நண்பன்". ஏற்கனேவே ஹிந்தியில் வந்து வெற்றி பெற்ற "3 இடியட்ஸ்" படத்தின் கதையை தமிழுக்கு தகுந்தவாறு மாற்றி தந்திருக்கிறார் ஷங்கர். நண்பன் பாரியை(விஜய்), தேடி வெங்கட்(ஸ்ரீகாந்த்), செந்தில்(ஜீவா ) மற்றும் ஸ்ரீவத்சன்(சத்யன்) மூவரும் பயணிக்கின்றனர்.
கதை மெல்ல வெங்கட்டின் பார்வையில் விரிகிறது. பாரி பணக்கார வீட்டு பையன், எதை பற்றியும் கவலை படாமல் "எல்லாம் நன்மைக்கே"என்ற போக்கு உடைய அதி புத்திசாலி, வெங்கட் போட்டோ கிராபர் ஆக வேண்டும் என்று ஆசை உடையவன் ஆனால் அப்பாவிற்காக இன்ஜினியரிங் படிக்கும் நடுத்தர வர்க்கம், செந்திலோ உடல் நிலை சரியில்லாத அப்பா, திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாத அக்கா மற்றும் அம்மாவுடன் வாழும் ஏழை, எதிர்காலத்தை பற்றி பயத்தினால் எப்பொழுதும் கடவுளை கும்பிட்டு கொண்டிருப்பவன். இந்த மூவரை சுற்றி நகரும் கதையே நண்பன்.
பாரி படிப்பதை புரிந்து விரும்பி படிக்க வேண்டும் என்கிறான், ஸ்ரீவத்சன் போல் மனப்பாடம் செய்து படித்து விருமாண்டி சந்தானத்திடம்(சத்யராஜ்) நல்ல பெயர் எடுக்க விரும்பாதவன், அதனாலேயே சந்தனத்தின் வெறுப்பை சம்பாதித்து கொள்கிறான், பாரியுடன் வெங்கட்டும், செந்திலும் நண்பனாக பழகுவதை பிரிக்க பார்க்கிறார். இதற்கு நடுவில் சந்தானத்தின் மகள் ரியா(இலியானா)வுடன் காதல் ஏற்படுகிறது. நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிகையை ஏற்படுத்தி விட்டு பிரிகிறான்,அவனை தேடி நண்பர்கள் செல்கிறார்கள்,சென்ற இடத்தில பாரியின் பெயரில் வேறு ஒருவர் இருக்கிறார்(எஸ்.ஜே.சூர்யா ), அவரிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொண்டு பாரியை மீண்டும் தேடி புறப்படுகின்றனர்.
பாரி யார்? நான்பர்களின் கதை என்ன ? விருமாண்டி சந்தானம் திருந்தினாரா? இல்லையா ? என்பதை சுவை பட சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். ஒவ்வெருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்த்து நடித்துள்ளனர். பார்க்க வேண்டிய படம்.
Share:












