Filmics

DMCA.com

மங்காத்தா - திரைவிமர்சனம்

mankatha-movie-review2

சஸ்பெண்ட் ஆன போலிஸ் அதிகாரியாக வரும் அஜித்குமார், தன் காதலியான திரிஷாவின் அப்பாவிடமிருக்கும் கிரிக்கெட் சூதாட்ட பணத்தை (ரூ. 500 கோடி) கொள்ளையடிக்க முயல்கிறார். திரிஷாவின் அப்பாவிடம் பணியாற்றும் இருவர், அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.

சூதாட்டப்பணம் மும்பையில் கைமாற இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் காவல் துறை அதிகாரியான அர்ஜுன் தனது சகாக்களுடன் அதை முறியடிக்க கிளம்புகிறார் மும்பைக்கு.

அஜித்குமாருடன் மற்ற நால்வரும் சேர்ந்து கொண்டு அந்த 500 கோடி ரூபாயையும் திருடிக் கொள்கிறார்கள். இவர்களை காவல் துறையான அர்ஜுன் குழுவும், கிரிக்கெட் சூதாட்ட புக்கியான ஜெயப்பிரகாஷின் குழுவும் துரத்துகிறது. இதனிடையே இந்த 5 பேரும் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிவிட்டு, அந்த பணத்தை தாமே அடையலாம் என திட்டம் போட்டு ஒருவரை ஒருவர் விரட்டுகிறார்கள்.

முடிவில் அப்பணம் என்ன ஆனது? அஜித்தின் நிலை என்ன? மற்ற நால்வரின் கதி என்ன? காவல் துறை ஜெயித்ததா? கிரிக்கெட் புக்கி குழுவினர் ஜெயித்தனரா? என்பதைச் சொல்லி இந்த ‘மங்காத்தா’ ஆட்டத்தை முடித்து வைக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

‘மங்காத்தா’வின் தலைவராக அஜித் குமார், 40 வயது நிரம்பிய போலிஸ் அதிகாரியாக ‘வினாயக் மாதவன்’ கேரக்டரில் வருகிறார். அந்த வயதிற்கே உரிய தொப்பை, நரைத்த முடி என அனாசயமாக வருகிறார். மங்காத்தா இவருக்கு 50-படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது திரைவாழ்வில் ஒரு மைல்கல். இப்பட்டிப்பட்ட படத்தில் ‘எதிர்மறையான பாத்திரம்’ ஏற்று நடித்திருக்கும் அஜித்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போடலாம்.

இவர் சொல்லும் டயலாக்கில் தியேட்டர் அதிர்கிறது. ‘நானும் எவ்வளவு நாள்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது’ எனும் போது, ஒவ்வொருவரின் மனதில் உள்ள பணத்தாசையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

பிரேம்ஜி அமரனிடம் ‘லைட் போட்டு வண்டி ஓட்டலாம்... ஆனால் லைட்டா போட்டுகிட்டு வண்டி ஓட்டக்கூடாது’ என்று காமெடியிலும் கலக்குகிறார் அஜித். திரிஷாவை லவ்வுவதிலும், பணத்தின் மேல் குறியாய் இருப்பதில் அக்மார்க் முத்திரை பதிக்கிறார். இடைவேளைக்கு முன்னதாக 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்கும் போது, நடக்கும் பைக் சேஸிங் காட்சியில் அசத்தியிருக்கிறார் மங்காத்தா அஜித்.

காவல் துறை அதிகாரி வேடம் என்றால் அர்ஜுனுக்கு சொல்லவா வேண்டும். மனிதர் மிரட்டிவிட்டுப் போகிறார். அவரும் அஜித்தும் வருகிற காட்சிகள் பரபரப்பு கூட்டுகிறது. ஆண்ட்ரியாவிடம் அர்ஜுன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் ஜிலு ஜிலு.

 

mankatha-movie-review3

 

தியேட்டர் அதிபர் என்ற போர்வையில் மிகப் பெரிய கிரிக்கெட் புக்கியாக வருகிறார் ஜெயப்பிரகாஷ். அவருக்கு மகளாக திரிஷா. இவர்களை மையப்படுத்திதான் திரைக்கதை நகர்கிறது என்பதால் இவர்கள் தங்கள் பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

‘வாடா பின்லேடா’ பாடலில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் திரிஷா அழகாக வந்து இருக்கிறார்.

வைபவிற்கு காதலியாகவும், மனைவியாகவும் வந்து விட்டு போகிறார் அஞ்சலி. அதற்கு மேல் அவருக்கு படத்தில் சொல்லிக் கொள்ளும்படி வேலை இல்லை

மகாகவி பாரதியாரின் பேரனான நிரஞ்சன் பாரதி எழுதிய 'கண்ணாடி நீ... கண்ஜாடை நான்...' பாடலுக்கு வைபவ் – அஞ்சலி ஜோடியும், அர்ஜுன்-ஆண்ட்ரியா ஜோடியும் ஆடிப் பாடுகிறார்கள். அழகாய் கண்ணில் நிறைகிறார்கள். பார் நடத்துனரின் தோழியாக வரும் லட்சுமிராய் ‘விளையாடு மங்காத்தா’ பாடலுக்கு ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

பிரேம்ஜி அமரன் இப்படத்தில் ஐஐடியில் படித்தவராக, டெக்னாலஜியில் புலியாக வருகிறார். ஆனால் பயந்து சாவதில் எலியாக இருக்கிறார். இவரது காமெடி படத்திற்கு கிடைக்கும் பூஸ்ட்.

 

mankatha-movie-review1

 

படத்தில் குறைகள்

அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. காவல் துறையில் அதிகாரியாக இருக்கும் ஒருவர் இவ்வளவு பணத்தாசை கொள்ள காரணம் என்ன? அவர் எதற்காக அப்பணத்தை அடைய நினைக்கிறார் என்பதை சொல்லாமல் விட்டது ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது. அளவுக்கு அதிகாமன கேரக்டர்கள் படதில் அடிக்கடி தலையை நீட்டுவது. இவையெல்லாம் குறைகளாக இருக்கிறது.

இனி நிறைகள்

*அஜித்தின் அட்டகாசமான நடிப்பு, ‘500 கோடி ரூபாய்...’ என்று சொல்லியபடியே அவர் தனது உடம்பை சிலிர்க்கும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.

*ஆரம்பத்தில் தொய்வாக இருந்தாலும், அதற்குப் பிறகு வேகம் எடுக்கும் வெங்கட் பிரபுவின் விறுவிறுப்பான ‘மங்காத்தா’ திரைக்கதை

*யுவன்சங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னணி இசையும், பாடல் இசையும் படத்திற்கு பலம்.

*சக்தி சரவணனின் மிரட்டலான ஒளிப்பதிவு.

*விறுவிப்பான திரைக்கதைக்கு பிரவீண் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரின் நேர்த்தியான படத்தொகுப்பு கைகொடுப்பது.

மொத்தத்தில் ‘மங்காத்தா’ நிச்சயம் ரசிகர்களுடன் விளையாடும் படம்! அஜித் ரசிகர்களுக்கு ஆர்ப்பாட்டமான படம்!

 

mankatha-film-review1

 

More News..

http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/filmography-of-thala-ajith-50.html


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402