எங்கேயும் காதல் - கலக்கல் திரைவிமர்சனம்
- Details
- Published on Friday, 06 May 2011 12:10
- Hits: 2764
பிரபுதேவாவின் இயக்கத்தில் ஜெயம் ரவியும், ஹன்சிகா மோட்வானியும் பிரான்ஸ் நாட்டினில், காதல் ரகளை செய்திருக்கும் படம்தான் இந்த எங்கேயும் காதல்.
* படத்தின் முதல் காட்சியே எங்கேயும் காதல் என்ற பாடலோடு துவங்குகிறது. இப்பாடலில் பிரபுதேவா நடனமாடியிருக்கிறார். முழுக்க முழுக்க காதலர்களை இப்பாடலில் காட்டுகிறார்கள்.
* பிரபுதேவா ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப் படுத்தி வைக்கிறார்
* கமலாக வரும் ஜெயம் ரவி இந்தியாவில் பிறந்தாலும் மேல்நாட்டு கலாச்சாரத்தை விரும்பும் நபர். சென்னையில் பிஸினெஸ் மேனாக இருக்கும் இவர், விடுமுறைக்காக பிரான்ஸ் செல்கிறார். இவரது நண்பராக ராஜு சுந்தரம்.
* கயல்விழியாக வரும் ஹன்சிகா பிரான்சில் பிறந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு வளர்ந்து வருகிறார். இசைக்கல்லூரி மாணவியாக வரும் அவர், ஒரு இடத்தில் பெரிய செலியோவை(வயலின் மாதிரி) வாசித்துக் கொண்டிருக்கிறார். அங்கே தற்செயலாக வரும் ஜெயம் ரவியை சந்திக்கிறார். சில சந்திப்புகளில் ரவியின் மேல் காதல் கொள்கிறார் ஹன்சிகா.
* ஜெயம் ரவிக்கு காதல் என்றாலே அலர்ஜி, டேட்டிங், இத்யாதி இத்யாதி என மற்ற எல்லா வேலைகளும் செய்வதில் மன்னன். அப்படி இருப்பவரை ஹன்சிகா காதல் செய்கிறார்.
* 'தீ இல்லை', 'லோலிதா...' பாடல்கள் முதல் பாதியிலேயே வந்து விடுகிறது.
* தன் காதலை சொல்வதறக்காக, ஜெயம் ரவியிடம் கிரீட்டிங் கார்டை கொடுக்கிறார் ஹன்சிகா. அதைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் இந்தியாவிற்கு கிளம்புகிறார் ரவி. ஏர்போர்ட்டிற்காக காரில் கிளம்பும் ரவி, சற்று தூரம் சென்ற பிறகு கையசைத்துக் கூப்பிட, தன்னைத்தான் கூப்பிடுகிறான் என்று மகிழ்ந்த ஹன்சிகா, காரை நோக்கி ஓடி வருவதற்குள், ஒரு பிரான்ஸ் பெண்ணை ரவி அழைத்திருக்கிறான் என்பதை கண்டதும் அழுகிறார்.
அங்கே வருகிறது இடைவேளை...
* இந்தியா சென்ற ரவி மீண்டும் பிரான்ஸ் வருகிறார். பிளே பாயாக இருக்கும் ஜெயம் ரவியை, பல விதமான தந்திரங்கள் செய்து தன் காதலை எப்படி ஹன்சிகா வெற்றிபெற வைக்கிறார் என்பதை மீதிப் பாதியில் சொல்லியிருக்கிறார் பிரபுதேவா.
* காதல் தூது என்றால் புறா ஞாபகம் வரும். அதுபோல் இரண்டாவது பாதியில் ஒரு புறா இவர்களோடு இணைகிறது... பிற்பாதியில் மீதி மூன்று பாடல்கள் வருகிறது.
@குறிப்பாக வள்ளியே சக்கர வள்ளியே பாடலில் ஒரு குறும்புத்தனமான சிறு கதையை படமாக்கியிருக்கும் பிரபுதேவாவின் ரசனைக்கு தராளமாக வெரிகுட் சொல்லலாம்.
* ஜெயம் ரவி கலக்கியிருக்கிறார். படத்துக்குப் படம் நடிப்பில் மெருகேறியிருக்கிறார். இயல்பான துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
* ஹன்சிகாவின் முதல் படம், அறிமுகப் படமும் இதுதான். ஆனால் சில காலதாமங்களால் மாப்பிள்ளை படம் முந்திக் கொண்டுவிட்டது.
* ஹன்சிகாவின் காதல் பார்வைகள் கவிதை சொல்கிறது. பிரான்சின் அழகில் அவரது நடனம் ரம்மியமாய் இருக்கிறது. ஜெயம் ரவியைக் கவர்வதற்கு இவர் செய்யும் தந்திரங்கள் ரசிக்க வைக்கின்றன.
* படத்திற்கு மிகப்பெரிய பலம் நீரவ்ஷாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் ஹாரிசின் இசையும்தான். இயற்கை வெளிச்சத்தை வைத்தே நிறைய காட்சிகளை கவிதையாக எடுத்திருக்கும் நீரவ்ஷாவினை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பிரான்சின் அழகுகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
* ஹாரிஸின் ஆறு பாடல்களும் அதகளம் செய்கின்றன. பின்னணி இசையும் கலக்கல் ரகம்.
* ரவியின் நண்பனாக வரும் ராஜு சுந்தரம், காமெடியும் செய்கிறார். பிரகாஷ் ராஜும் இப்படத்தில் சில காட்சிகளில் வந்து போகிறார்.
* படத்தினை காதலர்களுக்கு அர்ப்பணம் செய்துவிடலாம் போல. திரைக்கு வந்த காதல் படங்களில் இப்படமும் ஒரு தனியிடத்தைப் பிடிக்கும்.
பெண்ணுக்கு பின்னால் ஆண் சுற்றி சுற்றி காதல் செய்வதை விடுத்து, ஆணுக்கு பின்னால் ஒரு பெண் சுற்றி, அந்தக் காதலில் எப்படி ஜெயித்துக் காட்டுகிறாள் என்ற வித்தியாசமான கதைக்கோணம் அருமை. கொளுத்தும் கோடை வெயிலில் காதலர்களுக்கேற்ற குளுகுளு காதல் படம்தான் இந்த ‘எங்கேயும் காதல்’.
Share:












