Filmics

DMCA.com

ரா.ஒன் – முன்னோட்டம்

ra-one-movie-previewபாலிவுட் நாயகனான ஷாரூக்கானின் கனவுத் திரைப்படம் ‘ரா.ஒன்’. ஷாரூக்கான் ஏற்கனவே ‘உயிரே’, ‘ஹேராம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார். தற்போது ‘ரா.ஒன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அசத்த வருகிறார்.

இத்திரைப்படத்தை ஷாரூக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், எராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து 250 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை உருவாக்கி வருகின்றன.

‘நீங்கள் வைத்திருக்கும் விளையாட்டுப் பொருள்களே உங்கள் வாழ்க்கையுடன் விளையாடினால் என்ன ஆகும்? இதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து உங்களை ஜி.ஒன் மட்டுமே பாதுகாப்பான்’ என்ற ஒரு வரிக் கதையை அறிவியல் புனைவுகளைக் கலந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதனுடன் இந்திய ரசிகர்களுக்கே உரிய காதலையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

ரா.ஒன் என்ற தலைப்பு ராண்டம் ஆக்சஸ்: வெர்ஷன் ஒன் என்ற ஆங்கில சொற்களின் முதல் வார்த்தைகளை இணைத்து உருவாக்கி இருக்கிறார்கள். (Random Access: Version 1.0’. ‘Ra.One’)

ரா.ஒன் என்ற கொடூர வில்லனால் ஏற்படும் இன்னல்களை ஜி.ஒன்னாக வரும் ஷாரூக்கான் எப்படி எதிர் கொண்டு வெற்றி பெறுகிறார் என்பதை அறிவியல் புனைகதையாக்கி இருக்கிறார் இப்படத்தின் இயக்குனரான அனுபவ் சின்ஹா.

ஷாரூக்கானின் காதலியாக கரீனா கபூர் நடிக்க, வில்லன் ரா.ஒன்னாக அர்ஜுன் ராம்பால் நடித்திருக்கின்றனர். விஷால்-சேகர் மற்றும் அகோன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர்.

நிகோலா பெகோரினி மற்றும் மணிகண்டன் ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். சஞ்சய் ஷர்மா மற்றும் மார்ட்டின் வால்ஷ் ஆகியோர் படத்தொகுப்பு பணியை செய்திருக்கின்றனர். ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படத்தின் பணிபுரிந்த தொழில் நுட்பக் கலைஞர்கள், இப்படத்தின் விஷிவல் எபெக்ட்ஸ் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்திய சினிமா வரலாற்றில் அதிக அளவு பொருட் செலவில் உருவாகியுள்ள முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த ரா-ஓன் வரும் தீபாவளி தினத்தன்று ஹிந்தியில் வெளியாகிறது. அதே தினத்தில் தமிழ், தெலுங்கு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

உலகம் முழுவதும் 3200 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. தமிழில் இடம்பெறுகின்ற இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படத்தில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் ஜி.ஒன்னை காப்பாற்றுகின்ற காட்சியில் வருகிறார்.

ஹாலிவுட் தரத்திற்கு இணையாக, 3டி முறையில் உருவாகிவரும் இந்த ரா.ஒன் திரைப்படம், வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது.

English summary

The title ‘Ra.One’ gives the meaning ‘Random Access: Version 1.0’. ‘Ra.One’ is a Sci-Fi superhero film made with a whopping budget of over 250 Crores, the most expensive film in Indian cinema history. Shah Rukh Khan plays the superhero.

The film has Shah Rukh Khan, Kareena Kapoor, Arjun Rampal in the lead roles. Superstar Rajinikanth, Sanjay Dutt and Priyanka Chopra do cameo appearances in the film. Rajini plays the Robot ‘Chitti’ that he played in ‘Endhiran’.


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402