மங்காத்தா
- Details
- Published on Saturday, 07 May 2011 10:16
- Hits: 5844
தயாநிதி அழகிரி மற்றும் ரத்னவேல் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் படம் மங்காத்தா. இது அவரது 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அசல் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் கலவையாக உருவாகி வருகிறது. இவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட படல் நடித்துள்ளனர்.
சென்னை, மும்பை தாராவி, உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இறுதிகட்ட படப்படிப்பிற்காக மே 10 அன்று பாங்காங்க் செல்ல இருக்கின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் பாடல்கள் வெளியிடப்படவில்லை. ‘விளையாடு மங்காத்தா... விடமாட்டா எங்காத்தா...’ என்ற ஒரு பாடலின் சரணம் மட்டும் டீஸராக வெளியாகி உள்ளது.
ஒளிப்பதிவை சக்தி சரவணன் கவனித்துக் கொள்ள, படத்தொகுப்பு வேலைகளை பிரவீண் & ஸ்ரீகாந்த் கவனிக்கின்றனர். இப்படத்தினை முதலில் அஜித்தின் பிறந்தநாளான மே – 1 அன்று வெளியிடுவதாக இருந்தது. அது முடியாமல் போகவே, பாடல் வெளியீடு மே- 1 அன்று இருக்கும் என்றனர். அதுவும் முடியாமல் போனதால், அன்றைய தினத்தில் ஒரு டீஸர் வெளியிட்டனர்.
இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
Share:












