வாள மீன் பாடல் புகழ் ’மைக்’ முத்துராஜா மரணம்
- Details
- Published on Wednesday, 22 February 2012 15:17
- Hits: 305
சித்திரம் பேசுதடி படத்தில் பிரபலபான 'வாளமீன்' பாடலில் காமெடி நடிகர் முத்துராஜா நடித்திருந்தார். இவர் நேற்றிரவு மரணமடைந்தார்.
’வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்..’ என்ற பாடல் முழுவதும் கானா உலகநாதனுக்கு மைக் பிடித்தபடியே நடித்திருந்தார் முத்துராஜா. இவர் நடித்த இந்த பாடல் தமிழகத்தையே கலக்கியது. இவர் வேங்கை, ஜெயம் கொண்டான், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை உள்ளிட்ட 50-க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்ற மாதம் 30 ஆம் தேதி தான் இவருக்கு திருமணம் நடந்தது. இவர் தனது சொந்த ஊரான தேனியில் உள்ள கே.கே பட்டியில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு தன் வீட்டு மாடியில் உள்ள நீர்தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் மிகுந்த அடிபட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹோமா நிலையில் சேர்க்கப்படிருத்தர். பின்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இதனால் இவரது மனைவி மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவரது திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Share:












