விமல், ஒவியா நடிக்கும் படத்தின் பெயர் மாற்றம்!
- Details
- Published on Wednesday, 22 February 2012 13:38
- Hits: 226
டைரக்டர் ’ரவி லல்லின்’ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ”சிலு சிலுன்னு ஒரு சந்திப்பு” என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்போது படத்தின் டைட்டிலை பலர் வேண்டுகோளுக்கிணங்க மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர்.
’களவாணி’ புகழ் விமல் மற்றும் ஒவியாவின் கூட்டணியில் இப்படம் உருவாகிறது. திபா ஷா இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். “சிலு சிலுன்னு ஒரு சந்திப்பு” என்ற இந்த படத்தின் தலைப்பை “சில்லுனு ஒரு சந்திப்பு” ஆக மாற்றம் செய்திருக்கிறார் டைரக்டர் ரவி.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் நல்லா இருக்கணும் நினைக்கிற, என்னுடைய நண்பர்கள் பலர் படத்தின் டைட்டில் நடைமுறையில் சொல்வதற்கு மிக எளிதாக அமையும்படி கேட்டுக்கொண்டார்கள். எனவே, அவர்களின் விருப்பபடி ’சில்லுனு ஒரு சந்திப்பு’ ஆக மாற்றம் செய்தேன்” என்று கூறினார்.
Share:












