திரையுலகம் சார்பில் நாளை நாடு முழுவதும் ஸ்டிரைக்!
- Details
- Published on Wednesday, 22 February 2012 11:45
- Hits: 181
திரையுலகம் சார்பாக நாடு முழுவதிலும் நாளை (23-02-2012) ஸ்டிரைக் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்டிரைக் மத்திய அரசின் சேவை வரியை கண்டித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு திரையுலகத்துக்கான சேவை வரியை 30 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள திரையுலக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து ஸ்டிரைக்கை நட்த்த திரையுலக சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. நாளை நடைபெறும் ஸ்டிரைக்க்கில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது. ஸ்டூடியோக்கள் மூடப்படும் மற்றும் திரையரங்கில் படக்காட்சிகள் நடைபெறாது. திரையுலகம் சம்பந்தப்பட்ட அத்தனை அமைப்புகளும் நாளை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இது குறித்து சம்மேளன தலைவர் வினோத் கே.லம்பா கூறியதாவது :
”திரையுலகம் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு பிரச்சனையாக சேவை வரியை 30 சதவீதமாக உயர்த்தி எங்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. தற்போது வெளிவரும் படங்கள் வெற்றியை காட்டிலும், தோல்விகளை தான் அதிகம் சந்திக்கின்றன. என்வே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய கோரி, திரையுலக சம்மேளனம் இந்த ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டுள்ளது” இவ்வாறு கூறினார்.
Share:












