’துப்பாக்கி’ யில் விஜயின் நண்பனாக சத்யன்!
- Details
- Published on Tuesday, 07 February 2012 13:53
- Hits: 293
ஷங்கர் இயக்கத்தில் ’நண்பன்’ படம் பொங்கலன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜயின் நண்பனாக நடித்த காமெடி நடிகர் சத்யன், தன்னுடைய நடிப்பு திறமையை முழுவதும் வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் இவருடைய நடிப்பு மற்ற நடிகர்கள், இயக்குனர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
சமீபத்தில் ‘நண்பன் படத்தை பார்த்தார் ஏ.ஆர்.முருகதாஸ். சத்யனின் நடிப்பு மிகவும் பிரமாதம் என்று பாராட்டினார். இதை தொடர்ந்து தான் இயக்கும் ‘துப்பாக்கி’ படத்திலும் விஜய் நண்பராக நடிக்க சத்யனுக்கு சான்ஸ் கொடுத்துள்ளார் முருகதாஸ்.
‘துப்பாக்கி’ படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் வித்யத் ஜம்வால் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஹரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார்.
Summary :
Sathyan who did friend role in Vijay’s recent outing Nanban is again teaming up with Vijay for his ‘Thupakki’. A.R. Murugadoss who saw sathyan’s performance in Nanban has roped in for Thupakki. Kajal agarwal is doing female lead role in this movie.
Share:












