ஹோம்லி, கிளாமரில் கலக்கும் சஞ்சனா சிங்!
- Details
- Published on Thursday, 23 February 2012 10:59
- Hits: 314
ஹோம்லி மற்றும் கிளாமர் இரண்டிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என சஞ்சனா சிங் ஆசைப்படுவதாக கூறினார். இது பற்றி அவர் கூறும்போது,
”தமிழில் நான் ’ரேணிகுண்டா’ படத்தில் நடிக்கும் போது அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு அப்படிப்பட்ட எந்த கேரக்டரும் பெயர் சொல்லும் அளவிற்கு இதுவரை கிடைக்கவில்லை. தற்போது இயக்குனர் அதியமான் இயக்கத்தில் ‘தப்பு தாளங்கள்’ என்ற படத்தில் கிளாமர் ஹீரோயினாக நடிக்கிறேன். மேலும், சி.எஸ்.அமுதன் இயக்கும் ‘இரண்டாவது படத்திலும் நடிக்கிறேன். ஹோம்லி மற்றும் கிளாமர் இரண்டு வேடங்களிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை. ஷோ கேஸ் மாதிரி நடிப்பதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை” என்று கூறினார்.
மேலும்,’மறுபடியும் ஒரு காதல்’, ‘மயங்கினேன் தயங்கினேன்’, ‘வெயிலோடு விளையாடு’ போன்ற படங்களில் எனது நண்பர்களுக்காக ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடியுள்ளதாகவும் கூறுகிறார்.
Share:












