தமிழ் மொழியை கற்க ‘ரிச்சா’ வின் ஆர்வம்!
- Details
- Published on Monday, 06 February 2012 16:04
- Hits: 229
‘ரிச்சா’ வுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறினார்.
தனுஷுடன் ‘மயக்கம் என்ன’, சிம்புடன் ‘ஒஸ்தி’ ஆகிய படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபத்யாய். இவர் தனது தாய்மொழியான பெங்காலி படமொன்றில் நடித்து வருகிறார். ’சிறுத்தை’ ரீமேக்கான இப்படத்திற்கு ’சிங்கா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் ஷீட்டிங் தற்போது நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பின் போது ரிச்சா கூறியாதாவது:
”தென்னிந்திய மொழிகளில் நடித்துவிட்டு, எனது தாய்மொழியில் நடிப்பது மிகுந்த சந்தோஷத்தை தருகிற்து. இப்போது என் உதவியாளர் மூலமாக தமிழ் மொழியை கற்றுக்கொண்டு வருகிறேன். இப்படி தெரியாத ஒரு மொழியை கற்பதை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் உணர்கிறேன். எந்த படமும் மொழி தெரிந்து நடிக்கும் போது, படத்தில் சிறப்பாக நடிக்கலாம்” என்று கூறினார்.
இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மேலும், இவருக்கு இந்தி படத்தில் நடிப்பது நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. விரைவில் இந்தி படமொன்றில் அறிமுகமாவேன் என்றும் கூறினார்.
Summary :
Osthi girl Richa is now in a mission to learn Tamil language. Yes, the actress who is getting offers after her success of Osthi wants to learn the language and hence she started to learn through his assistant. Currently she is doing a Bengali movie titled ‘Singha’.
Share:












