பார்த்திபனின் அடுத்த படம் “ஆப்பு”...!?
- Details
- Published on Tuesday, 07 February 2012 13:23
- Hits: 199
வித்தியாசமான நடிப்பால் மக்களை கவர்ந்த நடிகர் பார்த்திபன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு ”ஆப்பு” என்று பெயர் வைத்திருக்கிறார்.
சமீபத்தில் பார்த்திபன் நடித்து வெளியான ’வித்தகன்’ படத்தில், பல சுவாரஸியமான வசனம் மற்றும் வித்தியாசமான காட்சிகளை வைத்து மக்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். இவருடைய படத்திற்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு உண்டு. இவருடைய அடுத்த படமான ”ஆப்பு” வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் கதையானது ஐ.டி மற்றும் பிபிஒ நிறுவனங்களின் நிறை, குறைகளை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. இதில் 2 ஹீரோக்கள், 2 ஹீரோயின்களை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். இந்த படத்தை தானே இயக்கி, நடிக்கயுள்ளார் பார்த்திபன். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் எடுக்கப்படுகிறது.
Summary :
Actor Parthipan’s next movie is Aappu. Apart from directing the movie he is doing a crucial role in Aappu. Director and other cast will be finalized soon. Movie is all about explaining deficits of IT and BPO companies.
Share:












