பிரபுதேவா விவாகாரத்தில் நயன்தாரா குடும்பத்தினரின் புலம்பல்!
- Details
- Published on Wednesday, 08 February 2012 15:26
- Hits: 207
நயன்தாரா – பிரபுதேவா காதல் ஜோடி இந்த வருடம் திருமண தம்பதிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இவர்களின் காதல் வாழ்க்கையில் முறிவு ஏற்ப்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் நயன்தாரா குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இப்பிரிவு குறித்து நயன்தாரா குடும்பத்தினர் கூறியதாவது :
பிரபுதேவா தங்களின் குடும்ப பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் பிரபுதேவாவிற்காக இந்து மத்திற்கு மாறினாள். ஆனால் அவரோ நயன்தாராவை திருமணம் செய்ய தாமதம் ஆக்கினார். நயன்தாரா நாங்கள் தூக்கி வளர்த்த பெண், அவள் ஒரு வெகுளி, அவளுக்கு இப்படி ஆகும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள். இப்போ பிரபுதேவாவிடம் ஏமாந்து இருக்கிறாள். இதனால் நயன்தாரா மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிரபுதேவாவிற்கு பனம் தான் முக்கிய குறிக்கோளாக இருந்த்து. இவளுடய அன்பு அவருக்கு தெரியவில்லை. ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். சிம்பும் அப்படித்தான் அவருடைய வல்லவன் படத்தின் போது பண நெருக்கடி ஏற்ப்பட்டது. அப்போது நயன்தாரா தான் அவருக்கும் உதவினார். கடைசியில் அவரும், அவளை கைவிட்டு விட்டார்.
இந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நயன்தாராவுக்கு இப்போ தான் கடவுள் நல்ல வழியை வாழ்க்கையில் காட்டியுள்ளார். தற்போது தெலுங்கில் நாகர்ஜீனாவுடன் ஒரு படமும், தமிழில் அஜித்துடன் ஒரு படமும் நடிக்க இருக்கிறார். நயன்தாரா ஓகே என்றால் எங்கள் குடும்பத்திலேயே ஒரு நல்ல பையனை பார்த்து திரும்ணம் செய்து வைக்க தயார். இனிமேலாவது அவருடைய வாழ்வில் ஒளி பிறக்கட்டும்.
Summary :
Nayanthara’s family members are worried about the on-going happenings. The members are said to be in deep concern about Nayan’s life. As she faced bitter experiences in affair with simbu. Her close relatives are in attempts to set right her career and as well as personal life.
Share:












