Filmics

DMCA.com

பாடகர் மலேசியா வாசுதேவனின் முதலாமாண்டு நினைவஞ்சலி! - அவரது கலையுலகம் ஒரு பார்வை!

malasiya-vasudevanதிரையுலத்தில் தன் பாடல்களால் ரசிகர்களை வசிகரித்த பாடகர்களூள் மலேசியா வாசுதேவனும் ஒருவர். தன்னுடைய தனித்துவமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் வல்லமை பெற்றவர். அவர் நம்மை விட்டு பிரிந்து ஒரு வருடமாகிறது. இத்தருணத்தில் அவரை பற்றிய சிறு குறிப்பு.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த வாசுதேவன் தனது 66வது வயதில், நம்மை எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மரணத்தை தழுவினார்.

இவருக்கு என்று தனித்திறமைகள் பல உண்டு. தன் பாடும் பாடலை புரிந்து கொண்டு, அப்பாத்திரத்தில் ஈடுப்பட்டு பாடுவது இவரது சிறப்பம்சமாகும். தமிழ் மற்றும் பிற மொழிகளை சேர்த்து இதுவரை 12,000 – க்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் சிறு வயதிலேயே இருந்து மலேசியாவில், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது குடும்பம் இசை குடும்பம் என்றே சொல்லலாம். இவர் பாடுவதில் மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வத்தை செலுத்தினார். இதனால் அப்போது மலேசியாவில் இருந்த ஒரு நாடக்க்குழுவில் தன்னை பாடகராகவும், நடிகராகவும் சேர்த்து கொண்டார்.

அந்த நாடகக்குழு ஒரு நாடகத்தை படமாக்க சென்னைக்கு வந்த போது, இசைஞானி இளையராஜாவின் அறிமுகம் கிடைக்கப்பெற்று, அவரோட ”பாவலர் பிரதர்ஸ்” குழுவில் சேர்ந்தார். இந்த நாடகக்குழு நடத்திய படத்தில் மலேசியா வாசுதேவன் பாடி, நடித்தது அனைவரைது பாராட்டையும் பெற்றார்.

ஜெய்சங்கர் நடித்த ”டெல்லி டூ மெட்ராஸ்” படத்தில் ’பாலு விக்கிற பத்மா, உன் பாலு ரொம்ப சுத்தமா...’ என்ற பாடல் வரிகள் தான் இவர் முதன் முதலாக திரைப்படத்திற்காக பாடிய பாடல்.

இதன் பிறகு ’குன்னக்குடி விஸ்வநாதன்’ இசையில் “குமஸ்தாவின் மகள்” படத்திற்கு பாடல்கள் பாடும்போது, இவருடைய பெயரை ’மலேசியா வாசுதேவன்’ என்று மாற்றி வைத்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.

கமலின் ”16 வயதினிலே” படத்தில் பாடின ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, கோழிக்குட்டி வந்ததுன்னு...’ பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

இவர் பாடி பிரபலமான மெலடி பாடல்கள்,

தர்மயுத்தம் படத்தில் ‘ஆகாய கங்கை..’

சிகப்பு ரோஜாக்கள் – ’இந்த மின் மினிக்கு...’

கிழக்கே போகும் ரயில் – ‘கோவில் மணி ஓசை...’

கோழி கூவுது – ‘பூவே இளைய பூவே...’

malasiya-vasudevan-stills

தூறல் நின்னு போச்சு – ‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிலி....’ எனத்தொடங்கும் பாடல்கள் மட்டுமின்றி, இன்னும் பல பாடல்கள் இவருக்கு வெற்றியை தேடித் தந்தது.

இவைதவிர சோகம், பாசம், இளமை துள்ளும் பாடல்கள் என தன் வசீகர குரலால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் வாசுதேவன்.

வாசுதேவன் தன் நடிப்பிலும் மிகப் பெரிய இடத்தை மக்களிடையே தக்க வைத்திருக்கிறார். இவர் நடித்த படங்களிலேயே மறக்க முடியாத படம் இவரும், நடிகர் சத்யராஜும் சேர்ந்து ”முதல் வசந்தம்” படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் தான். மேலும், காமெடி வில்லன், அப்பா கேரக்டர் என எல்லா வித கதாபாத்திரத்திலும் தன்னுடைய நடிப்பாற்றலை நிரூபித்துள்ளார்.

இவர் நடித்த முக்கிய படஙகள் சில,

ஒரு கைதியின் டைரி,

திருடா திருடா,

அமைதிப்படை,

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,

பத்ரி,

என 85 – க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழக அரசு இவருக்கு ’கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தது. சிறந்த பின்னணி பாடகருக்கான ’தமிழ்நாடு மாநில பட விருது’-ம் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இவர் 2010 ஆம் வருடம் ”எண்ணம் தோன்றியது எழுத தூண்டியது” என்ற கவிதை புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இவர் கலை உலகில் ஆற்றிய பணிகள் ஏராளம். தமிழ் உலகம் உள்ள வரை இவருடைய புகழ் நிலைத்திருக்கும்.

மறைந்த மாமனிதர்க்கு ஃபிலிமிக்ஸ் இன் நெஞ்சார்ந்த முதலாமாண்டு நினைவஞ்சலி!


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402