’பிகினி’யில் கிறங்கடிக்கப் போகும் லக்ஷ்மி ராய்!
- Details
- Published on Wednesday, 22 February 2012 14:48
- Hits: 437
பருச்சூரி முரளி எழுதி, இயக்கும் படமான ”அதிநாயகுடு” படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ”காஞ்சனா”வில் நடித்த லக்ஷ்மி ராய் நடிக்கிறார். லேட்டஸ்ட்டாக இப்படத்தில் லக்ஷ்மி ராய் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் காஞ்சனா, மங்காத்தா ஆகிய படங்கள் லக்ஷ்மி ராயுக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் வாய்ப்பு லக்ஷ்மி ராய்க்கு கிடைத்துள்ளதால், படுகுஷியாக இருக்கிறார். இப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக லக்ஷ்மி ராய், சலோனி நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயசுதா நடிக்கிறார்.
லக்ஷ்மி ராய் கவர்ச்சியாக நடிப்பது அவருக்கு கைவந்த கலை. அந்த வகையில் இந்தப்படத்தில் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற காட்சியை வைத்துள்ளார் இயக்குனர். அப்போது குளத்திலிருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சியில் லக்ஷ்மி ராய் நடிக்க இருக்கிறார். இதனால் தெலுங்கில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
வழக்கமாகவே லக்ஷ்மி ராய் கவர்ச்சிகரமாகத்தான் வருவார், இப்போது 'ப்ளூ' பிகினியில் வரப் போவதால் ரசிகர்கள் பாடு என்னாகப் போகிறதோ என்ற பெரும் 'பரபரப்பு' ஏற்பட்டுள்ளது.
Share:












