ரஜினியுடன் நடிப்பது பற்றி கமலின் பேட்டி உண்மை இல்லையா...?
- Details
- Published on Friday, 17 February 2012 15:03
- Hits: 231
1997 இல் உலநாயகன் கமல் இயக்கத்தில் எடுக்கப்பட்டு, பல காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட ”மருதநாயகம்” படத்தை மீண்டும் தொடரப்போகிறார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. இது குறித்து நேற்று கமல் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
”மருதநாயகம் படத்தை மீண்டும் துவங்கபோகிறேன் என்பது பொய்யான செய்தியாகும். இந்நிலையில் நான் மும்பையில் ஒரு நாளிதழிக்கு போட்டியளித்தாகவும், மேலும் மருநாயகத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் கூறுவது உண்மைய்ல்ல. கடந்த பதினைத்து வருடத்திற்கு முன் நானும், ரஜினியும் சிங்கப்பூரில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் கூறியது என்றும், அதனை நேற்று நடந்தது போல் எதோ ஒரு இணையதளம் தவறாக வெளியிட்டது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் தற்போது விஸ்வரூபம் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருப்பதாகவும், அது முடிந்ததும் ”தலைவன் இருக்கிறான்” படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
Share:












