நடிகைகளை விட கமல் சிறந்த டான்ஸர்! - பிரபல நடன பயிற்சியாளர்
- Details
- Published on Wednesday, 22 February 2012 16:42
- Hits: 303
கமல் அளவிற்கு இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை என்று கூறுகிறார் விஸ்வரூபம் பட டான்ஸ் மாஸ்டர்.
விஸ்வரூபம் படத்தை கமலஹாசன் இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் கமல் ஹாசன் ‘கதக் நடனம்’ ஆடுகிறார். இதற்காக பிரபல நடன பயிற்சியாளர் ’பிஜு மஹராஜ்’ இடம் கதக் நடனம் கற்றுக்கொண்டு வருகிறார்.
இது பற்றி நடன பயிற்சியாளர் கூறியதாவது:
”என் அனுபவத்தில் நடனம் கற்பதில் கமல்ஹாசன் ஒருவரே ஆர்வமாக கற்றார். இந்த காலத்தில் பெரும்பாலான நடிகைகளுக்கு நடனம் கூட ஆட தெரியவில்லை. வெறும் கையையும் காலையும் ஆட்டுகிறார்கள். இதை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. அந்தகாலத்தில் வஹீதா ரெஹமான், மீனா குமாரியை ஒப்பிடுகையில் இப்போதுள்ள நடிகைகளின் நடனம் சொல்லுமளவிற்கு ஒன்றுமே இல்லை. இந்தவிதத்தில் பார்க்கும் போது மாதுரி தீட்ஷிக் மட்டுமே திறமையும், ஆர்வமும் படைத்தவர்” என்று கூறினார்.
Share:












