உலக நாயகன் கமல்ஹாஸனுடன் இணையும் ஹாலிவுட் ஜாக்கி சான்...!?
- Details
- Published on Tuesday, 07 February 2012 19:20
- Hits: 337
’விஷ்வரூபம்’ படத்தை தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம் ‘தலைவன் இருக்கிறான்’. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் முதன் முறையாக தமிழில் நடிக்க போகிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றன.
ஜாக்கி சான் நடித்த எல்லா படங்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதால், இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இவர் கமலின் தாசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு கலந்து கொண்டு, கமலின் நடிப்பை பாராட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
இதையொட்டி ஜாக்கி சான், உலகநாயகனின் ’தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. இதனால் கமல் மற்றும் ஜாக்கி சான் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இப்படத்தை ஆஸ்கார் இரவிச்சந்திரன் தயாரிக்கிறார். படம் ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படவிருக்கிறது.
Share:












