கோச்சடையானில் ரஜினி ஜோடி தீபிகா – சௌந்தர்யா அறிவிப்பு!
- Details
- Published on Tuesday, 07 February 2012 16:45
- Hits: 216
கோச்சடையானில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என்று, படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கோச்சடையான் பர்ஸ்ட் லுக்கில், ரஜினி சிக்ஸ் பேக்கில் தோன்றி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்க முதலில் காத்ரினாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதை அடுத்து ரானாவில் நடிக்க தயாராக இருந்த தீபிகா, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று படத்தின் இயக்குனரான சௌந்தர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
3D படமாக உருவாகும் இப்படத்திற்கு இயக்குனர் மேற்பார்வை செய்கிறார். மேலும், சரத்குமார், நாசர், ஷோபனா, ஸ்னேகா, ஆதி போன்ற நட்சத்திரங்கள் நடிக்க இருப்பது அனைவரும் தெரிந்த விஷயமே. இவர்களுடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Summary :
Deepika padukone who was signed for superstar Rajini kanth’s Rana being roped in to romance with the actor in his next movie Kochadaiyaan. Earlier Katrina was the actress who occupied space in news for being playing female lead actress in Rajini’s Kochadaiyaan.
Share:












