சென்னை ரைனோஸ் அணிக்கு விஜய் கொடுத்த விருந்து!
- Details
- Published on Monday, 20 February 2012 14:36
- Hits: 427
சமீபத்தில் நடந்த சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை ரைனோர்ஸ் அணி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விளையாடிய நடிகர்களும் மற்ற சக நடிகர், நடிகைகளும் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். சிசிஎல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சாதனையை பாராட்டி நேற்று சென்னையில் அணியின் உரிமையாளர் கங்கா பிரசாத் சென்னை ரைனோர்ஸ் அணிக்கு பதக்கம் வழங்கினார். அப்போது அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். இதனை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய், போட்டியில் கலந்து கொண்ட அணைத்து வீரர்களுக்கும் (நடிகர்களுக்கும்) ஒரு பெரிய விருந்து ஏற்பாடுசெய்திருந்தார். இதில் அணியின் கேப்டன் விஷால், விக்ராந்த், சாந்தனு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனால் இந்த நட்சத்திர அணி உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
Share:












