ரசிகர்கள் ஹன்ஸிகாவை இழுத்து, கிள்ளி ரகளை!
- Details
- Published on Saturday, 18 February 2012 17:30
- Hits: 321
சமீபத்தில் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கலை நகழ்ச்சியில் ஹன்ஸிகா மோத்வானி கலந்துகொண்டார். அப்போது அவருடன் அமலபால், நவ்யாநாயர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த சினிமா நட்சத்திரங்களை காண மாணவர்களும், பொதுமக்களும் மற்றும் ரசிகர்களும் கூடியிருந்தனர்.
இதையடுத்து ஹன்சிகா மோத்வனி கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களிடையே சிக்கிக்கொண்டார். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டு பார்க்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். பலர் அவர் கையை பிடித்தும், கிள்ளியும் ரகளை செய்தனர். இதனால் அவர் உடலில் சிறு கீரல்கள் ஏற்பட்டன.
இதனால் திணறி போன ஹன்சிகா அலறித்துடித்தார். உடனே அருகில் இருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து ரசிகர்களிடம் இருந்து மீட்டு பாதுகாப்பாக காரில் ஏற்றி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹனிசிகா கூறுகையில், ”போலிசார் ரசிகர்களை தடுத்து நிறுத்தி என்னை காப்பற்றினார்கள்” என்று கூறினார்.
Share:












