டைரக்டரை அசர வைத்த ’சீயான்’ விக்ரம்!
- Details
- Published on Tuesday, 21 February 2012 10:40
- Hits: 373
தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்காக, தன்னுடைய கெட்டப்பை எப்படி வேணுமானாலும் மாற்றக் கூடிய திறமைமிக்க நடிகர் ‘சீயான்’ விக்ரம்.
இயக்குனர் ’விஜய்’ இயக்கத்தில் வந்த ”தெய்வதிருமகள்” படத்திற்காக, விக்ரம் தன்னுடைய எடையை குறைத்து நடிப்பை வெளிப்படுத்தினார். இதைதொடர்ந்து சமீபத்தில் வெளியான ”ராஜபாட்டை” படத்தில் ஜிம்பாய் கேரக்டருக்காக மீண்டும் தன் எடையை கூட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அந்த வகையில் தற்போது விக்ரம், விஜய் இயக்கத்தில் “தாண்டவம்” படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக சிறு வயது இளைஞனாக நடிக்க, விக்ரமுடைய எடையை குறைக்குமாறு டைரக்டர் விஜய் கூறியுள்ளார்.
விஜய் சொன்ன சில வாரங்களிலேயே தன்னுடைய எடையை குறத்து, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றி டைரக்டர் முன் காட்சி அளித்தார் விக்ரம். அக்காட்சியை பார்த்து டைரக்டர் விஜய் அசந்து போனதோடு மட்டுமல்லாமல், விக்ரமின் ஈடுபாடு, முயற்சி ஆகியவற்றை பாராட்டினார்.
தாண்டவம் படத்தில் விக்ரமுடன், நடிகை அனுஷ்கா நடிக்கிறார். எமி ஜாக்ஸன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
Share:












