சிசிஎல் கிரிக்கெட் அனுபவம் வித்தியாசமானது – ரைனோஸ் கேப்டன் விஷால்
- Details
- Published on Monday, 20 February 2012 11:24
- Hits: 224
சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற சென்னை ரைனோஸ் அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ரைனோஸ் அணியினருக்கு மெடல் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.
இந்த மெடல்களை அணியின் உரிமையாளர் கங்கா பிரசாத் வழங்கினார். அணியின் கேப்டன் விஷால், ஸ்ரீகாந்த், விக்ராந்த், சிவா, விஷ்ணு, ரமணா, சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரைனோஸ் அணி கேப்டன் விஷால் கூறியதாவது:
”எங்கள் அணி ஜெயித்தது பெருமையாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்தியாவிலுள்ள எல்லா மொழி நடிகர், நடிகைகள் கலந்து கொள்வது இது போன்ற விளையாட்டுகளில் மூலமாக தான் வாய்ப்பு அமையும். இதுவொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. நடிப்பை தவிர மற்ற திறமையும் இருக்கிறது என்பதை இதன் மூலம் நிருபித்துவிட்டோம். இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
Share:












