புற்று நோயால் பாதிகப்பட்ட குழந்தைகளுடன் ‘மெரினா’ வை கண்டுகளித்த அஞ்சலி!
- Details
- Published on Friday, 17 February 2012 16:50
- Hits: 218
நடிப்பதோடு மட்மல்லாமல் சமுதாய அக்கறையும் சேவைமனப்பான்மையும் உடையவர் என்பதை நிருபித்துக்கடியுள்ளார் நடிகை அஞ்சலி. அவர் 15 -02 -2012 அன்று ”தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம்” நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அந்த தொண்டு நிறுவனம் உயிரை அழிக்கும் புற்று நோயால் பாதிகப்பட்ட குழந்தைக்களுக்காக சம்மீபத்தில் திரையில் வெளியான "மெரினா" திரைப்படத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்தது. இத்திரைப்படம் ஙூங்கம்பாக்கம் ‘போர் பிரேம்ஸ் பிரிவீயு திரையரங்கில்’ திரையிடப்பட்டது. அப்போது, இத்திரைபடத்தினை இக்குழந்தைகளுடன் நடிகை அஞ்சலி, இயக்குனர்கள் பாண்டிராஜ், களஞ்சியம் மற்றும் மெரினா பட நாயகன் 'சிவக்கார்த்திகேயன்' ஆகியோர் கண்டுக்களித்தனர்.
இது குறித்து அஞ்சலி, “இந்த வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்த, இந்த ’தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம்’ அமைப்பிற்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறினார்.
Share:












