எமி ஜாக்ஸனுக்கு காதல் வலை வீசுகிறார் பாலிவுட் நடிகர்!?
- Details
- Published on Wednesday, 08 February 2012 14:29
- Hits: 186
தமிழில் ’மதராஸ பட்டினம்’ படம் மூலமாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். இவர் தமிழில் சிம்பு, த்ரிஷா நடித்த ’விண்ணை தாண்டி வருவாயா’ ரீமேக்கான ‘ஏக் தீவானா தா’ என்ற இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகர் பிரதீக் என்பவருடன் நெருக்கமானார்.
இந்தி ரீமேக்கான ‘ஏக் தீவானா தா’ வின் பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். அப்போதிலிருந்து இவர்களின் நெருக்கம் அதிகமானதாக பாலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இது பற்றி பிரதீக் கூறும்போது :
“நான் அழகு தேவதையான எமி ஜாக்ஸனுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இது போல் மீண்டும் ஒரு வாய்ப்பு அமையுமா..? என்று தெரியாது. படவிழாவில் நாங்கள் நீணட நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு கூச்ச சுபாவம் ரொம்ப அதிகம். அதுவும் பெண்களிடம் பேசுவது என்றால் ரொம்ப கூச்சப்படுவேன். எமி சாதரணமாக எல்லோரிடமும் பழகுவார். என்னுடைய கூச்ச சுபாவத்தை போக்கியவர் எமி தான்.” இவ்வாறு கூறினார்.
Summary :
Madarasa pattinam heroine Amy Jackson and actor prateik are in love, this is the hot topic in bollywood circles now. The duo shared screen space for Ek Deewana tha which is remake of Vinnaithandi varuvaya. And the buzz is that both developed intimacy and love towards each other and are expected to celebrate Valentine ’s Day together.
Share:












