விஷ்ணுவர்தனின் அஜித் படத்தில் அமலாபால்...!?
- Details
- Published on Wednesday, 08 February 2012 11:44
- Hits: 343
விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது அந்த லிஸ்டில் ’வேட்டை’ நாயகி அமலாபால் நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவல் வந்துள்ளன. ஏற்கனவே இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா போன்ற நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். இப்படத்திற்கு யுவன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடைய சம்பளமாக 1.5 கோடி பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க கதநாயகியை தேடிக்கொண்டிருந்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அப்போது தனக்கு ஜோடியாக அமலாபால் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார் ஆர்யா. இதையடுத்து அமலாபாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குனர் கூறியுள்ளார்.
பில்லா முதல் பாகத்தில் அஜித், நயன்தாரா, விஷ்ணுவர்தன் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்த்து. இதை தொடர்ந்து இவர்களுடைய இந்த கூட்டணியும் வெற்றி வாகை சூடும் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
அஜித் – நயன்தாரா – ஆர்யா – அமலா பால் – விஷ்ணுவர்தன் ஆகியோர் இணைவதால் கோலிவுட், மற்றும் இவர்களின் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்திய்ள்ளது.
Summary :
It is evident that a movie is set to hit the floors soon with Ajith, Nayanthara, Arya doing lead roles under the direction of Vishnuvardhan. The latest buzz is that hpt happening girl Amala
paul might do vital role in this untitled movie.
Share:












