Filmics

DMCA.com

வித்தகன் – இசை விமர்சனம்

vithagan-movie-stillசெவன்த் சேனல் மாணிக்கம் நாராயணின் தயாரிப்பில் ரா. பார்த்திபன எழுதி, இயக்கி நடிக்கும் படம் ‘வித்தகன்’. இவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆறு பாடல்களையும் ரா. பார்த்திபனே எழுதி இருக்கிறார். இது பார்த்திபனுக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி இப்படத்தின் இசை விமர்சனத்திற்கு செல்வோமா..!

இப்படத்தின் இசைத் தகட்டில் முதலில் இடம்பிடித்திருக்கும் “ஏ... தே.. தே... இஸ்ஸ... இஸ்ஸ... இஸ்ஸ... இஸ்ஸ... கேப்பு....” என்ற பாடலை பென்னி தயாள் பாடியிருக்கிறார்.
இப்பாடலை ஸ்டைலிசான பாடலாக உருவாக்கி இருக்கிறார்கள். கதாநாயகனான காவல் துறை அதிகாரி ரௌத்திரனின் அறிமுகப் பாடலாக, இப்பாடல் அமைந்துள்ளது.

இதில் இடம் பெறும் வரிகளான...

“சிறுமூளை திரைக்கதை வடிக்கும்
பெருமூளை அவன் கதை முடிக்கும்
புதிரான சூத்திரதாரி வித்தகன்...” ரசிக்கும் படியாக இருக்கிறது. ராப் ஸ்டைலில் அமைந்திருக்கும் இப்பாடலில் வரிகளை தனித்து தெரிய விட்டு, பின் புலத்தில் இசை ஒலித்திருப்பது சிறப்பு.

இரண்டாவதாக இடம் பிடித்திருக்கும் “க்குதே கண்கள் விக்குதே... ” என்ற பாடல் காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலில் ஸ்ரேயா கோஷலின் குரலும், ஹம்மிங்கும், சங்கதியும் அருமை. மெல்லிசையிர் அமைந்த இப்பாடலில் இசையும், இவரின் குரலும் பின்னிப் பிணைந்து ஒலித்திருப்பது சிறப்பு... இவருக்கு இணையாக ஹரிஹரன் குரலும் கலக்குகிறது.

“அதிகாலை செய்தித் தாள் போல நுழைந்தாயே...
நிழலுக்கும் புவி ஈர்ப்பு விசை கண்டாயே...” என்ற வரிகள் காதலை சொல்வதாக அமைந்திருக்கிறது. இனிமையான பாடல்

மூன்றாவதாக இடம்பிடித்திருக்கும் “தனன்னனத் தந்தனா இந்த டியூனின் வார்த்தை எதுவோ…” என்ற பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். பெண்ணிற்குள் காதல் அரும்புவதையும், அவனது காதலனைப் பற்றியும் பாடும் பாடலாக அமைந்துள்ளது.

“காவல் ஆயிரம் போட்ட போதும்
தடை மீறும் ஊர்வலம்தான் காதல்...’’ என்ற வரிகள் கலக்கல். அதிரடி இசையும், இடையிடையே மெல்லிசையும் கலந்து, இப்பாடலில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர்.

நான்காவதாக இடம்பிடித்திருக்கும் “உன் ஸோனுல சேட்டைய போடு” பாடலை பிலிப் சையனோரா, சுசித்ரா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

பார் ஒன்றில் பாடப்படும் பாடல் போல் இருக்கிறது. மேற்கத்திய பாணி முறையிலும், நம்முடைய பாணி இசையையும் கலந்து கொடுத்திருக்கும் துள்ளலிசை பாடலிது. இப்பாடலில் சுசித்ராவின் குரல் நம்மை வசீகரிக்கிறது... இடையில் வரும் புல்லாங்குழல் இசை நம்மை ரசிக்க வைக்கிறது. இப்பாடலின் இரண்டாவது சரணத்தில் நிறைய ஆங்கில வார்த்தைகளை கொடுத்திருக்கிறார் பாடலாசிரியரான பார்த்திபன்.


ஐந்தாவதாக இடம்பிடித்திருக்கும் “கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்...” என்ற பாடலை சின்மயி பாடியிருக்கிறார். கதாநாயகியின் காதல் பிரிவை சொல்லுவது போல் இப்பாடல் அமைந்திருக்கிறது.

“நிமிட முள்ளில் வருடங்களை கடந்து விட்டோம் விரைவாய்
விஷம் தரவும் வீரியத்தில் விரவி விட்டாய் நிலையாய்...” என்ற வரிகள் காதலின் வலியையை சொல்வதாக இருக்கிறது. இப்பாடலில் சிறப்பு என்னவென்றால் ஒரு சரணம் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது.. மீதி இரண்டாம் சரணத்தை சின்மயியின் ஹம்மிங்கும், இசையும் ஆக்கிரமித்திருக்கிறது... வித்தியாசமான முயற்சிதான்.

ஆறாவதாய் இடம் பிடித்திருக்கும் “வேகமாய்... அதி வேகமாய்... துடிக்குதே இதயம்... ” பாடலை பென்னி தயாள், சுனிதா சாரதி, மாஸ்டர் ஆர். அபிநவ், கே. லஷ்மன், பேபிஸ் இசைமழை ஹரிதா, ஸ்ரேயா ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.

இப்பாடலை கேட்கும் போது ஏதோ பயணத்தின் போது குடும்பத்தினர் அனைவரும் பாடுவது போல் இருக்கிறது. உற்சாகம் அனைவரின் குரல்களிலும் ஒலிக்கிறது. இப்பாடலில் தனது இசைத் திறமையை காட்ட வேண்டும் என்பதற்காக்க ஒவ்வொரு கருவிகளின் இசையையும், தனித் தனியே ஒலிக்க விட்டிருக்கிறார்.

இப்படத்தின் ஆறு பாடல்களையும் பார்த்திபன் எழுதியிருக்க, அதற்கு விதவிதமான இசையை அள்ளித் கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஜோஷ்வா ஸ்ரீதர்.

இப்போதைய டிரெண்டிற்கு ஏற்றவாறு இசையமைக்க வேண்டும் என்பதற்காகவே ராப், ராக், ஸ்டைலிஷ் முறையில் பாடல்களை அமைத்திருக்கிறார்கள்.

வித்தகனின் பாடல்கள் அனைத்தும் வித்தக ரகம்!

- மோகனன்

English summary

Vithagan is the movie directed by R. Parthiban. This movie features R. Parthiban and Poorna in the lead roles. It has six songs totally. Parthiban has written the lyrics. Music is composed by Joshua Sridhar.


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402