'சின்தால் சரும பாதுகாப்பு சவால்- சீசன் 2' இறுதிப் போட்டி
- Details
- Published on Thursday, 19 January 2012 12:35
- Hits: 262
விஷன் புரோ மேனேஜ்மெண்ட் ஏற்பாடு செய்திருந்த 'சின்தால் சரும பாதுகாப்பு சவால்- சீசன் 2 இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.
இதில் சென்னையை சார்ந்த பிரவினா மற்றும் பிரசாந்தி ஆகியோர் வெற்றி பெற்றார்கள். இவர்களுக்கு பரிசாக தங்கம் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மக்கள் உபயோகிக்கும் பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் இந்திய நிறுவனமான ''கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் லிமிடெட்'' 'சின்த்தால் சரும பாதுகாப்பு சவால் - சீசன் 2' எனும் பெண்களுக்கான மாபெரும் போட்டி நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக நடத்தியதியது. 18 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கான இந்த போட்டியை கடந்த டிசம்பர் 13ஆம் தேதியன்று நடிகை ரம்யா கிருஷ்னான் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் தங்கம் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இப்போட்டியில் பங்குபெற தமிழகமெங்கும் உள்ள பல பெண்கள் விண்ணப்பித்தார்கள். இதன் முதல் கட்டத் தேர்வு, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன், தங்கம் தொடரில் இளவஞ்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகை காவேரி ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டு போட்டியார்களை தேர்வு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட இந்த போட்டியாளர்களில் இருந்து 15 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
இறுதிச் சுற்றுக்கு தேர்வான இந்த 15 பேருக்கும் நடனம், நடிப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஜனவரி 18ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் பங்குபெற செய்தார்கள். இந்த இறுதிச் சுற்றுக்கு நடுவர்களாக நடிகை காவேரி, நடிகர் நிதின் சத்யா, இயக்குநர் டி.பி.கஜேந்திரன், கோத்ரேஜ் நிறுவனத்தின் பிராண்ட் மேனேஜர் சின்மயி கேன்கர், கோத்ரேஜ் நிறுவனத்தின் 'ஏவிபி மீடியா & பிஆர்' சுபாஸ் ஸ்ரீனிவாஸன் ஐயர், டாக்டர்.முருகுசுந்தரம் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
15 இறுதிப் போட்டியாளர்களிடையே முதலாவதாக, தனி தனியாக நடிப்பது மற்றும் இருவர் சேர்ந்து நடிப்பது என இரண்டு சுற்றுகள் நடைபெற்றது. இந்த இரண்டு சுற்றுக்களில் நடுவர்கள் அளித்த மதிப்பென்களின் அடிப்படையில், பிரவினா, அனிநிதா தினேஷ், பிரசாந்தி, ஹேமாமலினி, உஷா மணிகண்டன், ரீத்துஸ்ரீ ஆகிய ஆறு பேர் மூன்றாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பிறகு நடைபெற்ற மூன்றாவது சுற்றான நடனப் போட்டியில் நடுவர்களின் அதிக மதிப்பென்களை பெற்று பிரவினா, ஹேமாமாலினி, ரீத்துஸ்ரீ ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தேர்வானார்கள். இதற்கிடையில் டிவி போட்டி நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் வையல் கார்ட் ரவுண்ட் என்ற அடிப்படையில் ரம்யா கிருஷ்ணனின் தேர்வாக நான்காவது வெற்றியாளராக பிரசாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்காவது சுற்றில் அடியெடுத்து வைத்த இந்த நான்கு பேர்களும் தனி தனியாக ''தங்கம்'' தொடரில் நடிக்கும் மூன்று நடிகர்களுடன் மேடையில் ஒரு காட்சியை உருவாக்கி அதற்கு ஏற்ப நடித்தார்கள். பிறகு ஐந்தாவது மற்றும் இறுதிச்சுற்றான அறிவுத்திறன் சுற்று நடைபெற்றது. இதில் 'கோத்ரேஜ் ஏவிபி மீடியா&பிஆர்' சுபாஸ் ஸ்ரீனிவாஸன் ஐயர் அவர்களுடைய "வாழ்க்கையில் அழகிய ஆரோக்கியமான சருமம் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம்?'' என்ற கேள்விக்கு பதிலளித்தார்கள்.
இறுதியாக இந்த நான்கு போட்டியாளர்களில் சென்னை பெண்களான பிரவினா மற்றும் பிரசாந்தி ஆகிய இருவரும் இறுதி வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த இருவருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணான் மலர் கொத்து கொடுத்து 'சின்தால் சரும பாதுகாப்பு சவால் - சீசன் 2' போட்டியின் வெற்றியாளருக்கான சான்றிதழை வழங்கினார். இவர்களுக்கு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் தங்கம் தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய ரம்யா கிருஷ்ணன், "என்னைப் பொருத்தவரை இந்த போட்டியில் கலந்துகொண்டு இறுதிப் போட்டி வரை வென்று இப்போது மேடையில் தங்களது திறமையை காண்பித்த 15 பேரும் வெற்றியாளர்கள்தான். இருப்பினும் நாம் யாரயாவது ஒருவரை வெற்றியாளராக தேர்ந்தெடுக்க வேன்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முதல் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கிறோம். மற்றபடி நீங்கள் அனைவரும் வெற்றிபெற்றவர்கள்தான். உங்களுடைய திறமையையும், மேடை தைரியத்தையும் கண்டு நான் வியந்துப்போனேன்.'' என்றார்.
விஷன் புரோ மேனேஜ்மெண்ட் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில்ஏராளமான திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். மேலும் சின்னத்திரை கலைஞர்கள் சில்பா, சிவானி, ஜூலி ஆகியோரின் நடன நிகழ்ச்சியும், பின்னணி பாடகர்கள் சுஜித் மற்றும் அனிதா ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகர் விஜய் சாரதி தொகுத்து வழங்கினார்.
Share:












