வித்தகன் – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Tuesday, 11 October 2011 17:22
- Hits: 424
செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் சார்பில் மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ள படம் ‘வித்தகன்’. ரா.பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். பூர்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது
இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களை முறையே ஹாரிஸ் ஜெயராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், அமீர், ஏ.எல்.விஜய், தங்கர்பச்சான், விவேக் வெளியிட்டனர். எமி ஜாக்ஸன், மதுமிதா, சினேகா, தன்ஷிகா, இனியா, ரோகிணி பெற்றுக்கொண்டனர்.
இவ் விழாவில் சத்யராஜ், ராம.நாராயணன், சுசீந்திரன், லிங்குசாமி, வெற்றிமாறன், நா.முத்துக்குமார், கு.ஞானசம்பந்தன், வசந்தபாலன், சேரன், தனஞ்செயன், எஸ்.பி.ஜனநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கரு.பழனியப்பன், பூஜா தொகுத்து வழங்க, ரா. பார்த்திபன் நன்றி கூறினார்.
இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காண...
English summary
‘Vithagan’ features Parthipan, as a cop, and Poorna in the lead roles. Parthipan has also written the story, lyrics and directed the film and the movie is produced by Manicam Narayanan of Seventh Channel. The audio release of this movie was held recently.
Share:












